×

சாமியார் மிரட்டலுக்கு பணிந்தது பாஜ மேலிடம்

மக்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுவிட்டது. 184 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 28 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உன்னாவ் தொகுதியின் வேட்பாளர் முக்கியமானவர். அவர் வேறு யாருமல்ல. தற்போதைய பாஜ எம்.பி.யான சாக்‌ஷி மகராஜ்தான். அப்படியென்ன முக்கியத்துவம் என்றால் மிரட்டல்தான்.

சில நாட்களுக்கு முன் சாமியார் சாக்‌ஷி மகராஜ் அதிரடியாக ஒரு எச்சரிக்கையை விடுத்தார். ‘உன்னாவ் தொகுதியில் என்னைத் தவிர வேறு யாரையாவது போட்டியிட வைத்தால் நடப்பதே வேறு. ரிசல்ட் வேற மாதிரி வரும். அதாவது, பாஜவுக்கு நல்லதாக இருக்காது. அவ்வளவுதான் சொல்வேன்’ என அதிரடியாக அந்த மிரட்டல் இருந்தது. இதுதொடர்பாக மாநில பாஜ தலைவர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கடிதமும் எழுதியிருந்தார். எதற்கு வம்பு என்று இப்போது அவருக்கே சீட் கொடுத்துவிட்டனர். சாக்‌ஷி மகராஜ், அரசியல்வாதி மட்டுமல்ல;  இந்து மத விஷயங்களில் ‘சாது’வாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sameer , Sameer threatened , threaten Bjp
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்